கடிந்து ஒரு
வார்த்தை பேசாமல்
கோபச்சொல்லை வீசாமல்
புத்தனை விட சாந்தமான அப்பா
கதராடையோடு கம்பீரத்தை
சேர்த்தணியும் அப்பா
புகை, சிகரெட்
மது, மாமிசம் இல்லாத
அஹிம்சை அவதாரமான அப்பாவையே
பல சமயம் தாக்குகிறது
என் கோபம்
எப்படி
சகித்துக்கொள்கிறார்கள் டாஸ்மாக் அப்பாவை
வேட்டி கழண்டு விழ
தெருவில் புரளும் குடிகார அப்பாவை?
வாய்ச்சொல் நாற்றமடிக்கும் அப்பாவை?
கட்டியவளைச் சந்தேகித்து அடித்து விரட்டும் அப்பாவை?
நரகல் அவதாரமான அப்பாவை?
கொலை வெறி ஏறாமல்
எப்படி சகித்துக்கொள்கிறார்கள் ?
நானாயிருந்தால் . . .
கொலை
செய்திருப்பேன் டாஸ்மாக் அப்பாவை
கோபச்சொல்லை வீசாமல்
புத்தனை விட சாந்தமான அப்பா
கதராடையோடு கம்பீரத்தை
சேர்த்தணியும் அப்பா
புகை, சிகரெட்
மது, மாமிசம் இல்லாத
அஹிம்சை அவதாரமான அப்பாவையே
பல சமயம் தாக்குகிறது
என் கோபம்
வேட்டி கழண்டு விழ
தெருவில் புரளும் குடிகார அப்பாவை?
வாய்ச்சொல் நாற்றமடிக்கும் அப்பாவை?
கட்டியவளைச் சந்தேகித்து அடித்து விரட்டும் அப்பாவை?
நரகல் அவதாரமான அப்பாவை?
கொலை வெறி ஏறாமல்
எப்படி சகித்துக்கொள்கிறார்கள் ?
நானாயிருந்தால் . . .
No comments:
Post a Comment