About ME

ஆனந்த விகடன்

இவர் - தாமிரபரணி தந்த இலக்கிய விளைச்சல். கவிதைப் பெண் என்பது இவரது முகம். நெல்லை மண் எல்லை கடந்து யாதும் ஊரே யாவரும் கேளிர் என நேசிப்பவர். பெண்ணியவாதி நிலை கடந்து மனித நேயவாதி(Not feminist but humanist) என்னும் தளம் புகுந்து யோசிப்பவர்.

 திரு மு.க.ஸ்டாலின், பத்மஸ்ரீ கமல் ஹாசன் மற்றும் பலர் வெளியிட்ட தொகுப்புகளோடு, கவிதை சிறுகதை புதினம், கட்டுரை, திரைப்பாடல்கள் என சிறகு விரிக்கும் பன்முகப் படைப்பாளி.

அவனின் திருமதி, தீ, தோஷம், பூஜை, கழிவு - முத்திரைச் சிறுகதைகளாக ஆனந்த விகடன் வைர விழாவில் பரிசு பெற்றவை.

உயரிய இலக்கிய விருதுகள் பெற்ற இவரின் படைப்புகள் கல்லூரிப்  பாடமாகவும், ஆராய்ச்சி மாணவர்களின் முனைவர் பட்டப் பாதையாகவும் சிறக்கின்றன.

பல சாதனைகளுக்குப் பிறகும், தன் அடுத்தக் கட்டத்தை நோக்கிப்   பயணம் செய்கிறார். திரைப்படப்  பாடல்களும், கதை வசனமும் எழுதிவருகிறார். 
                          
                                           அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு எல்லாம் பழங்காலம்! 
                           உச்சம், ஞானம், திடம், உயிர்ப்பு பெண்ணின் புதுக்கோலம் ! 

                                                             மேல் தட்டு மக்கள்
                                                         எல்லாமே அவர் வசம் 
                                                             கீழ்த்தட்டு மக்கள் 
                                                          எல்லாமே இலவசம் 
                                                            நடுத்தட்டு மக்கள் 
                                                        எல்லாமே விதிவசம் . . . .

படைப்புகள் பட்டியல்: 

1.    சுருதி பிசகாத வீணை - சிறுகதைகள்
2.    தேசம் மிச்சமிருக்கட்டும் - கட்டுரை
3.    புதிய திருப்பாவை - கவிதை 
4.    விடிவைத் தேடி - கட்டுரை 
5.    முதல் ஒளிபரப்பு ஆரம்பம் - நாவல்
6.    தாளம் தப்பிய தாலாட்டு - நாவல் 
7.    சாருலதா - குறுநாவல் 
8.    கதாநாயகி - குறுநாவல்
9.    ரிஷியும் மனுஷியும் - சிறுகதைகள் 
10.  வானவில் வாழ்க்கை - சிறுகதைகள்
11.  கனவுகள் கைப்பிடிக்குள் - நாவல் 
12.  சிகரம் சிலந்திக்கும் எட்டும் - நாவல் 
13.  தகனம் - நாவல் 
14.  சுயம் பேசும் கிளி - கவிதைகள் 
15.  வேடிக்கை மனிதர்கள் - குறுநாவல் 
16.  தோஷம் - சிறுகதைகள் 
17.  பெண் எழுத்து - கட்டுரைகள் 
18.  மன்மத எந்திரம் -  கவிதைகள்
19.  காதல் நாற்பது - கவிதைகள்
20.  நான் வல்லினம் - கவிதைகள்
21.  எனக்கும் கடவுளுக்கும் ஊடல் - கவிதைகள்
22.  நானும் இன்னொரு நானும் - கவிதைகள்
23.  என் காதலன் என் காதலி - கவிதைகள்
24.  சரஸ்வதியின் சிலுவை - சிறுகதைகள் 
25.  முத்தங்கள் தீர்ந்துவிட்டன - கவிதைகள்
26. ஆண்டாள் பிரியதர்ஷினி  சிறுகதைகள் (ஆயிரம் பக்கங்கள்)
27. வலி - குறுநாவல்
28. சூரியனை விடியவைப்போம் - புதுக் கவிதைப் புதினம்  
29. பெண் வாசனை - பெண் கவிஞர்களின் தொகுப்பு  
30. கதாநாயகி - சிறுகதைகளும் குறுநாவல்களும் 
 
பதிப்பாளர்கள்:

1. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
2. குமரன் பதிப்பகம் 
3. வானதி பதிப்பகம்
4. திருவரசு பதிப்பகம்
5. மதி நிலையம் 
6. ராகவேந்திரா வெளியீடு 
7. ஏகம் பதிப்பகம்  
8. விகடன் பிரசுரம்   


 விருதுகள்: 


1.   பாவலர் முத்துசுவாமி விருது 
2.   கவிஞர் வைரமுத்து விருது 
3.   KRG நாகப்பன் ராஜம்மாள் விருது 
4.   திருப்பூர் தமிழ்ச் சங்க விருது 
5.   லில்லி தேவசிகாமணி விருது 
6.   காசியூர் ரங்கம்மாள் விருது 
7.   ஆனந்த விகடன் வைர விழா சிறப்பு சிறுகதை விருது (நான்கு முறை)
8.   தமிழக அரசு கலைமாமணி விருது 2010
9.   தமிழக அரசு விருது - சிறந்த சிறுகதைத் தொகுப்பு 2011
10. ஸ்டேட் வங்கி இலக்கிய விருது 
11. செம்மொழி மாநாடு கவியரங்கம் 2010 - பங்கேற்பு
12. அண்ணா நூற்றாண்டு விழா கவியரங்கம் 2010 - பங்கேற்பு
13. பாரதியார் கவியரங்கம் - APJ அப்துல் கலாம் தலைமையில் - புது தில்லி 2003- பங்கேற்பு
14. 'தகனம்' செயின்ட் ஜோசப் கல்லூரிகளில்...
15. 'வானவில் வாழ்க்கை' ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் 
16. 'கதாநாயகி' கேரளா பள்ளி இறுதி பாடத்தில் இணைப்பு


இன்னும் பல கவியரங்க நிகழ்வுகள், கம்பன் கழக மேடைகள், கல்லூரிக் கருத்தரங்கங்கள் என பங்கேற்பும் படைப்பும் விருதும் தொடர்கதையாக. . . .