Tuesday, October 23, 2012

கோவிலும் தெய்வமும்

திறக்காத டாஸ்மாக் தான் எனது கோவில் . . .
குடிக்காத தமிழன் தான் எனது தெய்வம்.


 

மு.வ விழாவில் தலைமை

 

டெல்லி தமிழ்ச் சங்கம்







காதல் நாற்பது

பலபொழுதும்
விரிகிறது படுக்கை
மனைவியின்
மன்னிப்பில்

♬ ❤ ♡ ღ

குழந்தை . . .
அவனுக்கு ஒரு நிமிடம்.


அவளுக்கு ஒரு வாழ்க்கை

♬ ❤ ♡ ღ

குழந்தைகள்
ரட்சிக்கிறார்கள்
துன்பப்பட்டு 
பாரம் சுமப்பவர்களை

♬ ❤ ♡ ღ

எப்போதும் சுமக்கிறாள் சோறு
குழந்தைக்கும் அவனுக்கும்
காதலோடு...

யாரும் பார்த்ததில்லை
அவள் சாப்பிட்டு...

♬ ❤ ♡ ღ

மகாத்மாவும்
சராசரிதான்
கணவனாக

♬ ❤ ♡ ღ